ஆப்நகரம்

Hansika Motwani: முன்னாள் காதலர் சிம்பு உடன் மீண்டும் கைகோர்த்த ஹன்சிகா; அதிகாரப்பூர்வ தகவல்!

விரைவில் வெளியாக உள்ள தமிழ்ப்படம் மூலம், நடிகை ஹன்சிகா மீண்டும் சிம்பு இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Mar 2019, 10:17 am
’வாலு’ படத்தின் போது, சிம்பு - ஹன்சிகா இடையே காதல் மலர்ந்தது. இதுகுறித்து டுவிட்டரிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கடுத்த சில மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
Samayam Tamil Simbu.


இந்நிலையில் தனது முன்னாள் காதலர் சிம்பு உடன், மீண்டும் இணைந்துவிட்டதாக ஹன்சிகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். உடனே ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டாம். இந்த காதல் பறவைகள் மனரீதியாக ஒன்று சேரவில்லை.

அதற்குப் பதிலாக ‘மஹா’ என்ற படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர். முன்னதாக சிம்புவும், ஹன்சிகாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹன்சிகா தனது டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.


அதில், இணையத்தில் வைரலாகும் செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டேன். நாங்கள் முறைப்படி அறிவிக்கும் முன்பே, வேறு வகையில் செய்தி பரவத் தொடங்கி விட்டது. நாங்கள் ‘மஹா’ படத்தின் மூலம் ஒன்றாக நடிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் சிம்பு நடிக்கிறார். ’மஹா’ படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது, புகைபிடிக்கும் வகையில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


தனது முன்னாள் காதலியுடன் சிம்பு நடிப்பது புதிதல்ல. ஏற்கனவே ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா மூலம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்