ஆப்நகரம்

ஹன்சிகாவின் மார்க்கெட் டல்!!

சினிமாவில் ஹன்சிகாவின் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்துள்ளது.

TOI Contributor 10 Aug 2016, 5:30 pm
சினிமாவில் ஹன்சிகாவின் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்துள்ளது.
Samayam Tamil hansikas market is very dull
ஹன்சிகாவின் மார்க்கெட் டல்!!


தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவராக இருந்தார். முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்து வந்தார். கைவசம் கால்ஷீட் இல்லை என்று கூறும் அளவுக்கு பிஸியாக இருந்தார். தற்போது அவருக்க தமிழில் ‘போகன்’ படம் மட்டுமே கைவசம் உள்ளது.
ஒரு கட்டத்தில் அசின், ஸ்ரேயா இருவரும்ல் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தனர். திடீரென்று அவர்களுக்கு கைவசம் படங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. சுமார் 10 வருடமாக ஹீரோயினாகவே வலம் வரும் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, இன்னமும் தங்களது பிடிப்பை தளரவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். காஜல் அகர்வால், தமன்னா அவ்வப்போது டிராக்கிலிருந்து விலகினாலும் மீண்டும் மார்க்கெட்டில் இணைந்துக்கொள்கின்றனர். வெகுஜன தொடர்பை துண்டித்துக் கொண்டு ஒரு வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக்கொண்டிருப்பதுதான் ஹன்சிகாவின் பின்னடைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்