ஆப்நகரம்

#HBDChiyaanVikram: Haters இல்லாத ஒரு நடிகர்! பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் விக்ரமின் 54வது பிறந்தநாள் இன்று. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 17 Apr 2020, 10:08 am
தமிழ் சினிமா ரசிகர்களில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நடிகர் என்றால் விக்ரம் என்று சந்தேகமே இல்லாமல் கூறலாம். முன்னணியில் இருக்கும் மற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள், haters என இருதரப்பினர் இருப்பார்கள். சமூக வலைத்தளங்களில் எதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டு கொண்டிருப்பார்கள்.
Samayam Tamil Vikram


ஆனால் சீயான் விக்ரமுக்கு மட்டும் அப்படி நடப்பதில்லை. அவரை பிடிக்காது என சொல்பவர்களை பார்ப்பது அரிது. தமிழ் சினிமாவில் haters இல்லாத நடிகர் என்றால் அது விக்ரம் தான்.

சினிமாவை தொழிலாக பார்க்காமல் அதையே வாழ்க்கையாக வாழ்ந்து வருபவர் விக்ரம் என்று கூட சொல்லலாம். படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திரக்காக எந்த எல்லைக்கும் போக கூடியவர்.

ஐ படத்தில் ஒரு பகுதிக்காக அவர் உடல் எடையை ஏற்றிய அவர் அதன் பிறகு படத்தின் கதைக்கு ஏற்ப தனது எடையை பல மடங்கு குறைத்து அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார். சினிமாவை அவர் எந்த அளவுக்கு நேசித்திருந்தால் இப்படி செய்திருப்பார் என அவரை அப்போது பாராட்டியவர்கள் ஏராளம்.

தற்போது கோப்ரா என்ற படத்தில் நடித்து வரும் அவர் அதில் 20 விதமான கெட்டப்களில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இதுபோன்ற விஷயங்களை செய்ய விக்ரம் ஒருவரால் மட்டுமே முடியும் என அவரது ரசிகர்கள் பெருமை கொள்வதில் ஆச்சர்யமில்லை.

இன்று ஏப்ரல் 17, 2020, விக்ரமின் 54வது பிறந்தநாள். ரசிகர்கள் அனைவரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.





அடுத்த செய்தி

டிரெண்டிங்