ஆப்நகரம்

டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேப்பி பர்த்டே எஸ்.டி.ஆர்

34வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்புவுக்கு டுவிட்டரில் வாழ்த்து மழை பொலிந்து வருகிறது.

TNN 3 Feb 2017, 3:05 pm
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளான இன்று #HappyBirthdaySTR என்ற ஹேஸ்டேக்கை ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Samayam Tamil happy birthday str hashtag trending in twitter
டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேப்பி பர்த்டே எஸ்.டி.ஆர்


நடிகர், இயக்குனர் மற்றும் பின்னணிப் பாடகருமான சிம்பு, இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழுவினருடன் தனது 34வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருக்கு விஜய் டிவியின் தொகுப்பாளினியான டிடி இந்த ஆண்டு சிறப்பாக அமையவும், நிறைய படங்களில் நடிக்கவும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
A very very hapy bday @iam_str 🎂 hav a rockin year n giv us more films... hav a God blessed day and a successful year #HappyBirthdaySTR — DD Neelakandan (@DhivyaDharshini) February 3, 2017 அஅஅ படத்தின் இயக்குனர், நல்ல உடல் ஆரோக்கித்துடனும், சந்தோஷமாகவும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று சிம்புவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் மகத் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்