வயசானாலும் ஸ்டைலும், அழகும் கொஞ்சமும் குறையவே குறையாத ரஜினிகாந்த் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #hbdsuperstarRajinikanth என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
அவர் உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று பலரும் மனதார வாழ்த்தியுள்ளார்கள்.
அவரின் பிறந்தநாளுக்கு சிறப்பு மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியிட்டு அசத்தியிருக்கிறார்கள்.
கெரியரை பொறுத்தவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸாகி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
அவர் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இன்னும் 2 படங்கள் நடித்துவிட்டு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.