ஆப்நகரம்

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

ஹர்பஜன் சிங் மற்றும் லொஸ்லியா நடித்துள்ள பிரென்ட்ஷிப் பட மோஷன் போஸ்டர் நாளை 4 மணிக்கு வெளியாகிறது.

Samayam Tamil 4 Jun 2020, 11:16 pm
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக் பாஸ் வந்த போது தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் ஆர்மி துவங்கும் அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. ஓவியா ஆர்மிக்கு பிறகு லொஸ்லியாவுக்கு தான் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்தனர்.
Samayam Tamil Losliya in Friendship


அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் தமிழ் சினிமாவில் நடிகையாக கவனம் செலுத்த உள்ளதாக கூறினார். அவர் அறிமுகம் ஆகும் படம் பிரென்ட்ஷிப். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அதை எதிர்பார்த்து காத்திருப்பதாக லொஸ்லியா ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.


ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இந்த படத்தினை இயக்கி உள்ளனர். பிரென்ட்ஷிப் படம் முழுக்க முழுக்க கோயம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படமாக்கியுள்ளனர். நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய ரோலில் இந்த படத்தில் நடித்து உள்ளார்.

ஹர்பஜன் சிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார். படத்தின் தலைப்பை வைத்தே கணித்து இருக்கலாம்.. நம்
ஊரில் வந்து கல்லூரியில் படிக்கும் ஹீரோவுக்கு கிடைக்கும் நட்பு பற்றியது தான் முழு படமும். அந்த நண்பர்கள் கேங்கில் ஒருவராக தான் லொஸ்லியாவும் நடித்து உள்ளார்.

ஹர்பஜன் சிங்கிற்கு இது இரண்டாவது தமிழ் படம். அவர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ளார். சந்தானம் அந்த படத்தில் மூன்று ரோல்களில் நடித்து உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூன்று வெளிவந்து இருந்தது. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனை தொடர்ந்து தற்போது ஹர்பஜன் சிங்கின் அடுத்த படமான பிரென்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவரவுள்ளது. அதை பார்க்க நாளை மாலை 4 மணி வரை காத்திருங்கள்.

இது ஒருபுறம் இருக்க, லொஸ்லியாவின் இளமை பருவ புகைபடங்களை சிலவும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அந்த புகைப்படங்களில் லொஸ்லியா பாவாடை தாவணியில் அழகாக போஸ் கொடுத்திருந்தார். அப்போது அவர் அதிகம் ஒல்லியாக இருப்பது போல தெரிகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்