ஆப்நகரம்

அஜீத் சாரின் உழைப்பை ‘விவேகம்’ படத்தில் பார்க்கலாம்: அருண் விஜய்!

‘விவேகம்’ படத்தில் அஜீத் சாரின் உழைப்புக்காகவே படத்தைப் பார்க்கலாம் என்று நடிகர் அருண்விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 28 Aug 2017, 6:38 pm
‘விவேகம்’ படத்தில் அஜீத் சாரின் உழைப்புக்காகவே படத்தைப் பார்க்கலாம் என்று நடிகர் அருண்விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil hardwork means ajith says arunvijay
அஜீத் சாரின் உழைப்பை ‘விவேகம்’ படத்தில் பார்க்கலாம்: அருண் விஜய்!


‘விவேகம்‘ படம் வெளியாக பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ‘விவேகம்‘ படத்தின் வசூல் எந்தப் படமும் செய்யாத சாதனையாக முதல் வாரத்தில் ரூ. 5.75 கோடியைச் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது. படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அருண் விஜய் சமீபத்தில் ‘விவேகம்’ படத்தைப் பார்த்துவிட்டு, தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அஜீத் சாரின் கடினமான உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது. அவர் நடிப்பில் மிகச்சிறப்பான இடத்தில் இருக்கிறார். அவரது நடிப்புக்காகவே ‘விவேகம்‘ படத்தைப் பார்ப்போம்‘ என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்