ஆப்நகரம்

Oh Mana penne: ஹரிஷ், ப்ரியா காதல் பட டைட்டிலை வெளியிட்ட விஜய்

ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரின் படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று பெயர் வைத்துள்ளனர்.

Samayam Tamil 1 Oct 2020, 5:58 pm
தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடித்த பெல்லி சூப்புலு படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரை வைத்து தமிழில் ரீமேக் செய்துள்ளார் கார்த்திக் சுந்தர். இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் உதவியாளராக இருந்தவர் கார்த்திக்.
Samayam Tamil oh mana penne


படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்தார்கள். ஆனால் படப்பிடிப்பு முடிந்த வேகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோர் வெளியிடுவார்கள் என்று ஹரிஷ் கல்யாண் அறிவித்தார். அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், தலைப்பும் வெளியாகியுள்ளது.
படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று தலைப்பு வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ப்ரயாவும், ஹரிஷ் கல்யாணும் கெத்தாக இருக்கிறார்கள்.

முன்னதாக ஹரிஷ் கல்யாண் தான் ப்ரியா பவானி சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு வழியாக எங்களுக்காக சந்தோஷப்படுகிறேன். #HarishHeartsPriya
#LoveIsInTheAir என்று ட்வீட் செய்தார்.

பட ப்ரோமோஷனுக்கு இப்படியா செய்வீங்க ஹரிஷ் கல்யாண்! கோபமான நெட்டிசன்கள்

அவர் தன் படத்தை மனதில் வைத்து தான் ட்வீட் செய்திருந்தாலும் அதை பார்த்தவர்கள் வேறு மாதிரியாக புரிந்து கொண்டார்கள். ஹரிஷ் கல்யாண் ப்ரியா பவானி சங்கரை காதலிப்பதாக ட்வீட்டியுள்ளார் என்று பேச்சு கிளம்பிவிட்டது. சிலரோ, படத்திற்கு இப்படிக் கூடவா விளம்பரம் தேடுவீர்கள் ஹரிஷ் என்று அவரை விளாசவும் செய்தார்கள்.

முன்னதாக விக்கி டோனார் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான தாராள பிரபு படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹரிஷ் கல்யாணுக்கு ரீமேக் படம் ராசியாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் மேலும் ஒரு ரீமேக் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்