ஆப்நகரம்

ரஜினி கட்சியில் சேரச் சொல்லி கஸ்தூரியை அழைத்தார்களா?

பல கட்சிகளிடம் இருந்து அழைப்பு வருவதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Dec 2020, 1:25 pm
நாட்டு நடப்பு, அரசியல், சினிமா, விளையாட்டு என்று பல விஷயங்கள் குறித்து கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். அவர் போடும் ட்வீட்டுகளை பார்க்கவே பலர் அவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil kasthuri


கஸ்தூரிக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறது. இதை அவர் ஒருபோதும் மறைக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசியல் குறித்து கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வரும் சட்டசபை தேர்தல் மக்கள் எதிர்பார்க்கக்கூடிய நலல் தேர்தலாக இருக்கும். மாற்றம் வந்தே தீரும். ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவ்வளவு எளிதில் வந்துவிட முடியாது.

ரஜினி தனித்து போட்டியிட்டால் அது திமுகவுக்கு அனுகூலம். அவர் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது பாஜகவுக்கு அனுகூலம் என்பது என் கருத்து. நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

கொரோனா காலத்திலும், புயல் காலத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் நன்றாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே விடுவது ஒட்டகத்தை கூடாரத்திற்குள் விட்ட கதை தான். விளைநிலங்களை கூறுபோட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.

மத்தியில் ஒரே பெரிய கட்சி தான் உள்ளது. தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. பிற கட்சிகள் மற்றும் புதிதாக கட்சி துவங்குபவர்களிடம் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேர்வேன் என்பதை 20 நாட்களில் அறிவிக்கிறேன் என்றார்.

புதிதாக கட்சி துவங்குபவர்கள் அழைக்கிறார்கள் என்றால் ரஜினியின் கட்சியா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஜினி அழைத்தால் அவர் கட்சியில் சேர்ந்துவிடுங்கள் அக்கா என்று சிலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

ரஜினியை விளாசினால் பதிலடி கொடுப்பேன், இனி போர் நேரம்: ராணா

அடுத்த செய்தி

டிரெண்டிங்