ஆப்நகரம்

ரஜினி படம் ஸ்டில்ஸ் வெளியானதா?

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘2.0’ படத்தின் ஸ்டில்ஸ் இணைய தளத்தில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

TOI Contributor 23 Mar 2016, 5:08 pm
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ‘2.0’ படத்தின் ஸ்டில்ஸ் இணைய தளத்தில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
Samayam Tamil have rajini stills released
ரஜினி படம் ஸ்டில்ஸ் வெளியானதா?

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘2.0’ படம் டெல்லியில் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஆரம்பமான இந்தப் படப்பிடிப்பு அதிக பாதுகாப்புடனும் கெடுபிடியுடனும் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன் யாரும் கொண்டு வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
டைரக்டர் ஷங்கர் படங்களின் படப்பிடிப்பு முடிந்தால் கூட புகைப்படங்களை வெளியிடமாட்டார். அவருடைய படங்களின் புகைப்படங்களை அவர் மட்டுமே பார்த்து ரசித்துக் கொள்வார். தப்பித் தவறிக் கூட அதை மீடியா பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்வார். அப்படியே மீடியாவுக்கு கொடுத்தாலும் முக்கியமான டில்ஸ்களை தரமாட்டார்.
தற்போது 2.0 படத்தின் படப்பிடிப்பு தற்போது டில்லியில் ஒரு விளையாட்டரங்கில் அக்ஷய் குமார் நடிக்க வேண்டிய காட்சியை படமாக்கி வருகின்றனர். வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய்குமார் உள்ள புகைப்படங்கள் நேற்று இணையதளத்தில் திடீரென வெளியாகி அது வேகமாக எல்லா பக்கமும் பரவ தொடங்கின.
டைரக்டர் ஷங்கர் பாதுகாத்து வைத்திருந்த அக்ஷய்குமாரின் வித்தியாசமான ஸ்டில்ஸ் எப்படி வெளியானது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர் படக்குழுவினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்