ஆப்நகரம்

பிறந்தநாளின் போது டுவிட்டரில் ’இளவரசனான’ சிவகார்த்திகேயன்!

வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரான சிவகார்த்திகேயன் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

TNN 17 Feb 2017, 7:12 am
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற மாஸ் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
Samayam Tamil hbdprincesivakarthikeyan is trending in national level
பிறந்தநாளின் போது டுவிட்டரில் ’இளவரசனான’ சிவகார்த்திகேயன்!


இப்படத்தைத் தொடர்ந்து மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ என்று தொடர்ந்து ஹிட் கொடுத்து அடுத்தடுத்து படிகளை தாண்டிக்கொண்டே சென்றார். இப்படி 10 படங்களை நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 11வது படமான எஸ்.கே11 அல்லது ரஜினியின் டைட்டிலான வேலைக்காரன் படத்தில் முன்னணி ஹீரோயின் நயன்தாராவுடன் இணைந்துள்ளார்.

#HBDPrinceSivaKarthikeyan is trending in National level. This shows his tremendous Growth as a Hero. Next level #SK11Title @Siva_Kartikeyan pic.twitter.com/XoZ260gj4b — First Day First Show (@fdfscinema) February 16, 2017 இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளின் போது எஸ்கே11 படத்தின் அதிகாரப்பூர்வ் தலைப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் இளவரசனாக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது #HBDPrinceSivaKarthikeyan என்று டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறார்.

#HBDPrinceSivaKarthikeyan is trending in National level. This shows his tremendous Growth as a Hero. Next level #SK11Title

அடுத்த செய்தி

டிரெண்டிங்