ஆப்நகரம்

கமல்ஹாசன் நலமுடன் இருக்க காரணம் இதுதான்: அமைச்சர் மா சுப்பிரமணியன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருக்க காரணம் அவர் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியதே காரணம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.

Samayam Tamil 27 Nov 2021, 9:11 pm
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனையடுத்து அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல்ஹாசன்.
Samayam Tamil Kamal Haasan
Kamal Haasan


கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளார் என்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. நடிகர் கமல்ஹாசன் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

விக்னேஷ் சிவனுடன் இணையும் துருவ் விக்ரம்?: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் புதிதாக தோன்றி வரும் ஒமக்ரான் என்ற வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், கமல்ஹாசன் அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த போதிலும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்றும் தெரிவித்தார். எனவே தடுப்பூசி போடுவதன் விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க இருப்பதாகவும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்