ஆப்நகரம்

மனமுடைந்துவிட்டேன், நம்ப முடியலயே: ரிஷி கபூர் மரணத்தால் ரஜினி, கமல் வேதனை

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உயிரிழந்த செய்தி அறிந்த ரஜினிகாந்த் மனமுடைந்து போயுள்ளார்.

Samayam Tamil 30 Apr 2020, 10:30 am
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.
Samayam Tamil rajinikanth


ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மனமுடைந்துவிட்டேன்...ஆத்மா சாந்தியடையட்டும்...என் அருமை நண்பர் ரிஷி கபூர் என்று தெரிவித்துள்ளார்.

நம்ப முடியவில்லை. எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்தார் மிஸ்டர் ரிஷி கபூர். எங்களிடையே பரஸ்பர அன்பும், மரியாதையும் இருந்தது. என் நண்பரை மிஸ் பண்ணுவேன். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

நேற்று பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் புற்றுநோயால் இறந்த நிலையில் இன்று ரிஷி கபூர் இறந்த தகவல் அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் ரிஷி கபூர் மரணம்: நேற்று இர்ஃபான், இன்று ரிஷி- கவலையில் பாலிவுட்

இதை நம்பவே முடியவில்லை. காலையில் எழுந்தவுடன் ரிஷி கபூர்ஜி இறந்துவிட்டார் என்கிற செய்தி வந்தது. கபூர் குடும்பத்தாருக்கு என் ஆழந்த் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை மிஸ் பண்ணுவோம் கபூர் ஜி என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
இது சினிமாவுக்கு சோகமான வாரம். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் ரிஷி கபூர் சார். அவ்ரங்கஜீப் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தேன். தன் பாட்டனாரின் பெயர் என்பதால் என்னை பெயர் சொல்லி அழைக்க முடியாது என்றார். உங்களை மிஸ் பண்ணுவோம் என்று ப்ரித்விராஜ் ட்வீட் செய்துள்ளார்.

இது உண்மையாக இருக்கக் கூடாது. இது பொய் செய்தி என்று யாராவது சொல்லுங்களேன் என்று குஷ்பு ட்வீட் செய்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்