ஆப்நகரம்

துல்கர் சல்மானுக்கு போட்டியாகும் சிவகார்த்திகேயன்!

தமிழில் ரிமேக் ஆகவிருக்கும் மலையாள படத்தில் யார் நடிப்பார்கள் என்பதில் சிவகார்த்திகேயனுக்கும் , துல்கர் சல்மானுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

Samayam Tamil 21 Jan 2019, 5:44 pm
தமிழில் ரிமேக் ஆகவிருக்கும் மலையாள படத்தில்யார் நடிப்பார்கள் என்பதில் சிவகார்த்திகேயனுக்கும் , துல்கர் சல்மானுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
Samayam Tamil dq


கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘பவித்ரம்‘. இந்த திரைப்படத்தை டி.கே.ராஜீவ் குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மோகன்லால், திலகன், ஸ்ரீவித்யா, ஷோபனா, ஸ்ரீனிவாசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் மோகன்லாலின் தாய் ஸ்ரீவித்யா தனது 50வது வயதில் கர்ப்பமாகிறார். அதனைத் தொடர்ந்து என்னவாகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த கதையை போலவே ஹிந்தியில் ’பதாய் ஹோ’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது ‘பவித்ரம்‘ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த படத்தில் யார் நடிப்பார் என்பதில் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கூடியவிரைவில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குனர் என்பதை முறையாக அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்