ஆப்நகரம்

Thala59: தல அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் 3 ஆவது போஸ்டர் வெளியீடு!

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் 3ஆவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Mar 2019, 12:11 am
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் 3ஆவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil thala


அமிதாப் பச்சனின் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் தல அஜித் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில், தல அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தைரங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாஜலம் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி, தல 59 ஆவது படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று டைட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து, இப்படத்தின் 2ஆவது போஸ்டர், 3 ஆவது போஸ்டர் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.

இப்படத்திற்கு முன்னதாக இயக்குனர் வினோத் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரன் ஒன்று ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்