ஆப்நகரம்

Vada Chennai Audio: வட சென்னை படத்தின் ஆடியோ வெளியீடு: வைரலாகும் சந்தனத்த பாடல்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் இசை இன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Sep 2018, 6:06 pm
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் இசை இன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil dhansh


பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் விசாரணை ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து தனுஷ் நடித்துள்ள படம் வட சென்னை. இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

அடுத்தமாதம் 17ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியாகியுள்ளது. இதில், படத்தில் இடம் பெற்றுள்ள 8 பாடல்களும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் வரும் சந்தனத்த என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கொய்ந்தம்மாள் என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 8 பாடல்களும் அதனை பாடியவர்கள் பட்டியல்:

பாடல்: சந்தனத்த

பாடியவர்கள்: பாலசந்தர் மற்றும் கானா பாலா

பாடலாசிரியர்: கானா பாலா


பாடல்: கொய்ந்தம்மாவாலா

பாடியவர்: தனுஷ்

பாடலாசிரியர்: ரோகேஷ்


பாடல்: கார்குழல் கதவையே

பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர்: விவேக்


பாடல்: மாடில நிக்குற மான்குட்டி

பாடியவர்கள்: தி மற்றும் கானா பாலா

பாடலாசிரியர் : கானா பாலா

Vada Chennai: வடசென்னை அக்டோபர் 17ம் தேதி ரிலீஸ்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாடல்: என்னாடி மாயாவி நீ

பாடியவர்: சித் ஸ்ரீராம்

பாடலாசிரியர் : விவேக்


பாடல்: எப்படியம்மா

பாடியவர்கள்: சிதை ரேவ் ரவி

பாடலாசிரியர் : ஷெனாய் நகர் சண்முகம்


பாடல்: மத்திய சிறையில

பாடியவர்: அறிவு

பாடலாசிரியர்: அறிவு


பாடல்: அலங்கார பந்தல்

பாடியவர்: தோலக் ஜெகன்

பாடலாசிரியர்: சிதை நாதன்


பாடல்: வட சென்னை தீம்

பாடியவர்: ஆனந்த்

அடுத்த செய்தி

டிரெண்டிங்