ஆப்நகரம்

டைட்டில் லுக் போஸ்டருடன் படப்பிடிப்பை தொடங்கிய தனுசு ராசி நேயர்களே படக்குழு!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 22 Apr 2019, 2:00 pm
Samayam Tamil dhanusu
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இப்படத்தைத் தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு என்று வரிசையாக பல படங்களில் நடித்தார். ஆனால், எந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த நிலையில், தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஹரிஷ், ரைசா உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் செம ஹிட் கொடுத்தது.

Dhanusu Raasi Neyargale: தனுசு ராசி நேயர்களே என்று புதுசா பேர் வச்ச ஹரிஷ் கல்யாண்!

பேய் படங்களில் ராகவா லாரன்ஸ் தான் கில்லாடிக்கு கில்லாடி!

கருத்துக்கணிப்பில் பூவையார் முதலிடம்: எப்படி ரித்திக் ஜெயித்தார்? கொந்தளித்த மக்கள்!



Hrithik: சூப்பர் சிங்கர் ஜூனியர் 6: ரூ.50 லட்சம் வீடு, டைட்டில் வின்னரான ரித்திக்!

இரு படங்களுமே காதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனுசு ராசி நேயர்களே என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குனர் சஞ்சய் பாரதி இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில், டைட்டில் லுக் போஸ்டருடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஒன்று தொடங்கியுள்ளது.


நல்லவங்களுக்காக 4 பேத்த போட்டுத் தள்ளுனமானு இருக்கனும்: தேவராட்டம் டிரைலர்!

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரியா சக்ரபோர்தி என்ற பாலிவுட் நடிகை நடிக்கிறார். இப்படத்தின் மூலம், இவர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதுல்யா ரவி, பிக் பாஸ் 2 தமிழ் புகழ் டேனியல் ஆகியோர் பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்