ஆப்நகரம்

ஹீரோ செட்டாகவில்லை: பழைய படி வில்லனாக வரும் பாபிசிம்ஹா

வில்லனாக வலம் வந்த பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கத்தொடங்கி தற்போது மீண்டும் வில்லனாக மாறிவிட்டார்.

TNN 13 May 2017, 10:22 pm
வில்லனாக வலம் வந்த பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கத்தொடங்கி தற்போது மீண்டும் வில்லனாக மாறிவிட்டார்.
Samayam Tamil hero is not working villain is suitable bobby simha
ஹீரோ செட்டாகவில்லை: பழைய படி வில்லனாக வரும் பாபிசிம்ஹா


ஆரம்ப முதலே வில்லனாக நடித்து வந்த பாபி சிம்ஹா பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார். அதோடு, இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் கூறி வந்தார். இந்நிலையில், ஹீரோவான பாபி சிம்ஹாவுக்கு முதலில் பாம்பு சட்டை தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்படம் 2 நாட்கள் கூட ஓடவில்லை. இப்படத்திற்கு முன்பாக சில படங்களில் நடித்துவிட்டார்.

ஆனால், தான் ஹீரோவாக நடிக்கும் எந்த படங்களுமே ஓடாமல் போனதால் இனிமேல் ஹீரோ செட்டாகாது என்று முடிவெடுத்து தற்போது வில்லத்தனமான ரோலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கருப்பன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். திண்டுக்கல் மற்றும் தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்