ஆப்நகரம்

நயன்தாரா அவுட்! ஹன்சிகா இன்!?

நயன்தாரா அவுட்! ஹன்சிகா இன்!?

TOI Contributor 4 Oct 2016, 6:46 am
சூர்யாவின் அடுத்தப்படமான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்க வாயப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil heroine for surya acting thaana serndha kootam movie
நயன்தாரா அவுட்! ஹன்சிகா இன்!?


போடா போடி, நானும் ரௌடி தான் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இதில் சூர்யா மற்றும் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். ஏற்கனவே விக்னேஷ் சிவன், நயன்தாரா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் சூழலில் இந்தப்படத்தில் சேர்ந்து நடித்தால் மேலும் பல பிரச்னைகள் வரும் என்பதால் விலகிவிட்டதாக தகவல் தகவல் வெளியானது. நயன்தாரா விலகியதை அடுத்து பல ஹீரோயின்களுடன் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தற்போது ஹன்சிகாவை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்