ஆப்நகரம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘தேவ்’!

கார்த்தி நடிப்பில் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக உக்ரைனில் நடைபெறவுள்ளது.

Samayam Tamil 12 Jul 2018, 5:45 pm
கார்த்தி நடிப்பில் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக உக்ரைனில் நடைபெறவுள்ளது.
Samayam Tamil karthi


நடிகர் கார்த்தி ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை அடுத்து தற்போது ‘தேவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.

மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ், வம்சி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ரூ. 50 கோடி பட்ஜெட்டில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

சென்னையில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பும், ஹைதராபாத்தில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பும் முடிந்த நிலையில், 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் உக்ரைனில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து நடிகர் கார்த்தி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்