ஆப்நகரம்

‘நாச்சியார்’ பட தாக்கம் ஜி.வி. பிரகாஷை பாலிவுட் வரை கொண்டு சென்றுள்ளது!

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ‘நாச்சியார்’ படத்தைப் பார்த்து பாலிவுட் படத்தில் நடிக்க ஜி.வி. பிரகாஷுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 20 Mar 2018, 4:21 pm
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ‘நாச்சியார்’ படத்தைப் பார்த்து பாலிவுட் படத்தில் நடிக்க ஜி.வி. பிரகாஷுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil பாலிவுட் செல்லும் ஜிவி பிரகாஷ்!
பாலிவுட் செல்லும் ஜிவி பிரகாஷ்!


தமிழ் சினிமாவில் நடிகர்களில் விஜய்சேதுபதியை அடுத்து தற்போது பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜி.வி. பிரகாஷ். இவர் அடுத்தடுத்து ‘சர்வம் தாளமயம்‘, ‘ஐங்கரன்’, ‘4ஜி’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘செம’, ‘100% காதல்’ என பல படங்களில் நடிக்கவுள்ளார். இவரது கால்ஷீட் அடுத்த 2019 டிசம்பர் வரை உள்ளது. ஆகையால் 2020ல்தான் வேறு புதுப்படங்களில் நடிப்பார் என தெரிகிறது.

இந்த நிலையில் ஜி.வி. பிரகாஷை இந்தி படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். பாலா இயக்கியத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், அவரின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் “உங்களுக்கு ஏற்ற கதை ஒன்று வைத்திருப்பதாக கூறி, இந்திக்கு வாருங்கள் சேர்ந்து பணியாற்றலாம்“ என்று அழைத்திருக்கிறார். “இப்போது தமிழில் நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு பாலிவுட் வருகிறேன்” என்று ஜி.வி.பிரகாஷும் அனுராக் காஷ்யப்புக்கு பதில் கூறியதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்