ஆப்நகரம்

இந்தி ‘குயின்’ தெலுங்கு ‘மகாலட்சுமி’யாக மாறியது!

இந்தியில் வெளியான ‘குயின்’ படம் தெலுங்கில் ‘மகாலட்சுமி’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.

Samayam Tamil 5 Jun 2018, 5:09 pm
இந்தியில் வெளியான ‘குயின்’ படம் தெலுங்கில் ‘மகாலட்சுமி’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.
Samayam Tamil tamannah


இந்தியில் வெளியாகி ஹிட்டான படம் ‘குயின்’. இந்தப் படத்தின் நாயகியாக கங்கனா ரணாவத் நடித்திருந்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. தற்போது இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

தெலுங்கு ரீமேக்கில் நடிகை தமன்னா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நீலகண்டா இயக்குவதாக இருந்தது. ஆனால் தமன்னாவுக்கு அவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.அதையடுத்து இப்போது பிரசாந்த் வர்மா ‘குயின்’ தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார். இந்த படத்திற்கு தெலுங்கில் ‘மகாலட்சுமி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்