ஆப்நகரம்

பாலா மீது இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார்!

‘நாச்சியார்’ படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இயக்குனர் பாலா மீது இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

Samayam Tamil 16 Feb 2018, 5:26 pm
‘நாச்சியார்’ படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இயக்குனர் பாலா மீது இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
Samayam Tamil hindu makkal party complaints to director bala
பாலா மீது இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார்!


பாலா இயக்கத்தில் ஜோதிகா , ஜி வி பிரகாஷ் நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. இந்தப் படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகா பேசிய ஒரு வசைசொல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியான டீசரில் கூட எல்லா மதத்தின் கோயில் காட்சிகளில் காட்டி கடைசியில் ஜோதிகா எனக்கு கோயிலும் குப்பைமேடும் ஒன்று தான் என்று வசனம் இருந்தது.

இந்நிலையில் இன்று பாலா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தில் மதங்களை புண்படுத்தும் சில விஷயங்கள் இருப்பதால் இந்து மக்கள் கட்சி சார்பில் இயக்குனர் பாலா மீது போலீசில் புகார் அளித்துள்ளது..

அடுத்த செய்தி

டிரெண்டிங்