ஆப்நகரம்

ஹாலிவுட்டின் பிரபல சூப்பர்மேன் கதாநாயகி காலமானார்!

சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் தனது 69வது வயதில் காலமானார்.

Samayam Tamil 15 May 2018, 3:50 pm
சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் தனது 69வது வயதில் காலமானார்.
Samayam Tamil margot-kidder-7


பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் 1968ல் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், 1978ல் வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம், உலகம் முழுவதும் பிரபலமானார்.

சூப்பர்மேன் படங்களின் அனைத்து பாகங்களிலும் நடித்த மார்கட் கிட்டர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் தி நெய்பர்ஹுட், கடந்த ஆண்டு வெளியானது.

இந்தநிலையில், மார்கட் கிட்டர் நேற்று அமெரிக்காவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். 68 வயது வரை நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மார்கட் கிட்டருக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்