ஆப்நகரம்

RRR : ராஜமெளலியுடன் சரித்திரத்தில் இடம்பெறத் தவறிய எமிஜாக்சன்! ஏன்?

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை பிரபல நடிகை எமி ஜாக்சன் கைநழுவ விட்டுள்ளார்.

Samayam Tamil 22 Apr 2019, 5:16 pm
எமி ஜாக்சன் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘2.0’. இந்தப் படத்தை அடுத்து பட வாய்ப்புக்காக காத்திருந்தார். அந்த சமயத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி, தான் இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்க வெளிநாட்டு ஹீரோயின் தேவைப்பட்டது. அந்த நடிகைகளின் லிஸ்ட்டில் நடிகை எமியின் பெயரும் இருந்தது.
Samayam Tamil RRR


இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலியிடம் இருந்து அழைப்பு வரும் என எமி ஜாக்சன் காத்திருந்தார். ஆனால், அவரிடம் இருந்து யாரும் கால்ஷீட் கேட்டு வரவில்லை. பொறுமையிழந்த நடிகை எமி, தனது காதலன் ஜார்ஜ் பனயிட்டுவை திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களில் தான் கர்ப்பம் ஆனதாகவும் அறிவித்தார்.

எமியின் நிச்சயதார்த்தம் மற்றும் கர்ப்பம் அறிவிப்பால் இயக்குனர் ராஜமௌலி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த கேரக்டருக்கு வேறு ஒரு வெளிநாட்டு நடிகையை ஒப்பந்தம் செய்தார். மீண்டும் எமி வந்து வாய்ப்பு கேட்டார். ராஜமௌலி மேக்அப் சோதனை எடுத்தபிறகு என்னால் முடியாது என்று நழுவிவிட்டார்.

எமி ஜாக்சனுக்குப் பதிலாகத்தான் தற்போது நடிகைகள் நித்யா மேனன் அல்லது ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்