ஆப்நகரம்

அதெப்படி மறக்கலாம்?: ராதிகாவுடன் மகள் ரயன் செல்லச் சண்டை

ட்விட்டரில் ராதிகாவுடன் அவரின் மகள் ரயன் மிதுன் செல்லச் சண்டை போட்டுள்ளதை பார்த்த ரசிகர்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

Samayam Tamil 5 May 2020, 5:00 pm
படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என்று காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடிய ராதிகா சரத்குமார் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கியுள்ளார். வீட்டில் சும்மா இருக்கும் ராதிகா ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளிக்கிறார்.
Samayam Tamil rayane mithun


முன்பு பிசியாக இருந்த நீங்கள் லாக்டவுன் நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்று ரசிகை ஒருவர் ட்விட்டரில் கேட்டார். அதற்கு ராதிகாவோ, யோகா, சமையல், சுத்தம் செய்வது, பியானோ வாசிப்பது, ஸ்க்ரிப்ட் ஆலோசனைகள், அலுவலக மீட்டிங், மகனுக்கு படிப்பில் உதவி செய்வது என்று இருக்கிறேன் என்றார்.

ராதிகாவின் ட்வீட்டை பார்த்த அவரின் செல்ல மகள் ரயன் மிதுனால் சும்மா இருக்க முடியவில்லை. என்னுடன் ஃபேஸ்டைம் செய்வதை எப்படி நீங்கள் மறக்கலாம் என்று செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.
ரயன் மிதுன் ராதிகாவிடம் கேட்ட கேள்வியை பார்த்த ரசிகர்கள் சிரித்துவிட்டனர். நல்ல அம்மா, நல்ல பொண்ணு. ராதிமா எப்படி உங்களை மறப்பார்கள். நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்று ராதிகா சார்பில் ரசிகர்களே விளக்கம் அளித்துவிட்டனர்.

ரயன் மிதுனுக்கு அம்மா ராதிகா என்றால் உயிர். தன் மகளுக்கு அம்மாவின் பெயரை லைட்டாக மாற்றி ராத்யா என்று பெயர் வைத்துள்ளார் ரயன்.

தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகரை மறுமணம் செய்கிறாரா மேக்னா வின்சென்ட்?

அடுத்த செய்தி

டிரெண்டிங்