ஆப்நகரம்

‘சத்யா’ தலைப்பை கலிடம் கைப்பற்றியது எப்படி? சிபிராஜ் விளக்கம்!

நடிகர் கமலிடம் இருந்து ‘சத்யா’ பட தலைப்பை எப்படி வாங்கினோம் என்பது பற்றி நடிகர் சிபிராஜ் விளக்கம் தந்துள்ளார்.

TNN 13 Nov 2017, 2:03 pm
நடிகர் கமலிடம் இருந்து ‘சத்யா’ பட தலைப்பை எப்படி வாங்கினோம் என்பது பற்றி நடிகர் சிபிராஜ் விளக்கம் தந்துள்ளார்.
Samayam Tamil how i get sathya movie title explain sibiraj
‘சத்யா’ தலைப்பை கலிடம் கைப்பற்றியது எப்படி? சிபிராஜ் விளக்கம்!


நடிகர் சிபிராஜ் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இதே தலைப்பில் 1988ஆம் ஆண்டு கமல் & அமலா நடித்து வெளியான படம் ‘சத்யா’. கமல்ஹாசனே இந்தப் படத்தைத் தயாரித்திருந்ததார். ஆகையால் படத்தின் தலைப்பு உரிமை கமலிடம் உள்ளது.

இந்தத் தலைப்பை எப்படி கைப்பற்றினோம் என்பது பற்றி சிபிராஜ் கூறுகையில், “நாங்கள் படப்பிடிப்புக்கு போகும்போது தலைப்பைப் பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால், படப்பிடிப்பு நடந்து வரும் சமயத்தில் என்னுடைய கேரக்டருக்கு ‘சத்யா’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், கமல் சாரிடம் சென்று கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. காரணம், ஏற்கெனவே ஒருவர் கேட்டபோது கமல் சார் தர மறுத்துவிட்டார்.

அப்புறம், என்னுடைய அப்பா சத்யராஜ் பெயரை இதில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். காரணம் அப்பாவும், கமலும் நெருங்கிய நண்பர்கள். எனவே, தொழில் ரீதியாக அவரை அணுகினோம். எங்களுக்கு தலைப்பு கிடைத்தது. கமல் சார் கையாலேயே பர்ஸ்ட் லுக்கை வெளியிட வைத்தோம்’’ என்கிறார் சிபிராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்