ஆப்நகரம்

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் எப்படி?: நாவல் படித்தவர்களின் விமர்சனம்

Ponniyin Selvan review:பொன்னியின் செல்வன் நாவலை படித்த மக்கள் படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Samayam Tamil 30 Sep 2022, 10:31 am
பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் முதல் காட்சியை பார்த்து முடித்த கையோடு கருத்து தெரிவிக்கத் துவங்கிவிட்டார்கள்.
Samayam Tamil how is ponniyin selvan i novel readers review
Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் எப்படி?: நாவல் படித்தவர்களின் விமர்சனம்


பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நாவலை படித்தவர்களோ ஆவலில் அதிகாலை காட்சியை பார்க்க சென்றுவிட்டார்கள்.

விமர்சனம்

பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் படம் பார்த்த பிறகு கூறியிருப்பதாவது, நாவலை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வு படத்தில் ஏற்படவில்லை. பள்ளிக் குழந்தைகள் செந்தமிழ் பேசி நடித்த நாடகம் போன்று இருக்கிறது. படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்கிறார்கள்.

வந்தியத்தேவன்

வந்தியத்தேவன் கதாபாத்திரம் அருமை. அருண்மொழி வர்மனின் அறிமுக காட்சியை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. குந்தை, நந்தினி அழகு. பாகுபலிக்கு பக்கத்தில் கூட பொன்னியின் செல்வனால் வர முடியாது. பாகுபலி படத்தில் வரும் சின்ன சிலை பொன்னியின் செல்வன், பெரிய சிலை பாகுபலி என நாவலை படித்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

2கே கிட்ஸ்

வந்தியத்தேவன், குந்தவை வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஏமாற்றிவிட்டார். 2கே கிட்ஸுக்கு படம் மிகவும் பிடிக்கும். நாவல் படிக்காதவர்கள் பொன்னியின் செல்வனை கொண்டாடுவார்கள். ஆனால் நாவலை படித்தவர்களை கவரவில்லை. இது கல்கியின் பொன்னியின் செல்வன் இல்லை மணி சாரின் பொன்னியின் செல்வன் என கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்