ஆப்நகரம்

கூந்தலை பராமரித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா, தன்னுடைய கூந்தலை தினமும் பராமரித்து வருகிறார்.

Samayam Tamil 10 Aug 2018, 6:10 pm
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா, தன்னுடைய கூந்தலை தினமும் பராமரித்து வருகிறார்.
Samayam Tamil Noor-Box-Office


ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. சிலர் தன்னுடைய முக அழகை பராமரிப்பர். மற்றொருவர் தன்னுடைய மேனியை பராமரித்து வருவர். ஆனால், நடிகை சோனாக்ஷி சின்கா, தன்னுடைய முடியை பராமரித்து வருகிறார்.

நடிகை சோனாக் ஷி சின்காவுக்கு, தன் தலைமுடி மீது, கொள்ளை பிரியம். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, தலைமுடியை விதம் விதமாக அலங்கரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சோனாக் ஷியின் ஹேர் ஸ்டைலை பார்த்து, சக நடிகையர் வயிற்றெரிச்சலுடன் புலம்புவதும் உண்டு.

சோனாக் ஷி சின்காவின் தீவிர ரசிகர்கள் சிலர், அவர், 50 விதமான ஹேர் ஸ்டைலுடன் தோன்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில்,’பாலிவுட் நடிகையர் பலர், சோனாக் ஷி சின்காவை பார்த்துத் தான், தங்கள் ஹேர் ஸ்டைலை அலங்கரிக்கின்றனர்’ என, பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்