ஆப்நகரம்

சேலை கட்டுவது எப்படி? டெமோ காட்டி வகுப்பெடுத்த பிரபல நடிகை... தீயாய் பரவும் வீடியோ!

சேலை கட்டுவது எப்படி என்பது குறித்து பிரபல நடிகை டெமோ காட்டி வகுப்பெடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 14 May 2022, 2:23 pm
சேலை கட்டுவது எப்படி என பிரபல நடிகை டெமோ காட்டி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
Samayam Tamil how to wear saree mandira bedi video goes viral
சேலை கட்டுவது எப்படி? டெமோ காட்டி வகுப்பெடுத்த பிரபல நடிகை... தீயாய் பரவும் வீடியோ!



கணவர் மரணம்

நடிகை மந்திரா பேடி கடந்த 1999ஆம் ஆண்டு பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் கவுஷலை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கார்டியாக் அரெஸ்ட் காரணமாக ராஜ் கவுஷல் மரணமடைந்தார்.

மன்மதன்

பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி. துணிச்சலான பெண் என கருதப்படும் மந்திரா பேடி சின்னத்திரை மூலம் சினிமாவுக்கு வந்தார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள மந்திரா பேடி தமிழில் நடிகர் சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்திருந்தார்.

ஆண் நண்பருடன்

காதல் கணவர் மரணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மந்திரா பேடி நண்பர்களுடனும் தோழிகளுடனும் நேரத்தை கழித்து வருகிறார். சமீபத்தில் மந்திரா பேடி பிகினி உடையில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் விளையாடி போட்டோக்கள் வைரலாகி விமர்சனத்துக்குள்ளானது.

சேலை கட்டுவது எப்படி?

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறார் மந்திரா பேடி. அதாவது சோலை கட்டுவது எப்படி என டெமோ காட்டியுள்ளார் நடிகை மந்திரா பேடி. சேலை கட்டும் போது தலை முடியாமல் தொந்தரவு ஏற்படாமல் இருக்க வாரி சுருட்டி கேப் போட்டுள்ள மந்திரா பேடி மளமளவௌ 2 நிமிடங்களுக்குள் சேலையை கட்டி முடித்துவிட்டார்.

சூப்பர் மேடம்

இந்த வீடியோவை பார்த்த்த ரசிகர்கள் சூப்பர்.... அழகாக கற்றுக்கொடுத்து வீட்டிற்கள் என பாராட்டி வருகின்றனர். இன்னும் பலர் மந்திரா பேடியின் இந்த வீடியோவை பார்த்த பிறகு இந்த ஆண்டு இன்னும் அதிகமாக சேலை கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் பதிவிட்டு மந்திரா பேடியை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

javascript-Instagram

View this post on Instagram A post shared by Mandira Bedi (@mandirabedi)

அடுத்த செய்தி

டிரெண்டிங்