ஆப்நகரம்

நடிகர் ஹிருத்திக் ரோஷனின் புதுக்காதலி..!

சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்,சக பாலிவுட் நடிகையான நேகா தூபியாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 14 Nov 2016, 11:24 am
சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்,சக பாலிவுட் நடிகையான நேகா தூபியாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil hrithik roshans new lover is neha dhupia
நடிகர் ஹிருத்திக் ரோஷனின் புதுக்காதலி..!


முன்னணி பாலிவுட் நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன்,சூசன்னா கான் என்பவரை கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.இந்த தம்பதிகளுக்கு ஹிரேகான்,ஹிரிதான் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் மூலம் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ஹிருத்திக் ரோஷன் - சூசன்னா தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்டனர்.இந்நிலையில் தற்போது ஹிருத்திக் ரோஷனும்,பாலிவுட் நடிகையாக நேகா தூபியாவுடன் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.இருவரும் இதுவரை இணைந்து நடித்ததில்லை.இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளி இடங்களில் சுற்றி வருவதாக கூறப்பட்டது.இதனை உறுதி செய்யும் விதத்தில் இருவரும் கட்டிப்பிடித்தது போல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

hrithik roshan's new lover is neha dhupia?

அடுத்த செய்தி

டிரெண்டிங்