ஆப்நகரம்

Kanaa: யூடியூப்பில் முன்னணி பாடகிகள் கூட செய்யாத சாதனையை செய்த சிவகார்த்திகேயன் மகளின் பாடல்

கனா படத்திற்காக சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடிய பாடல் யூடியூப்பில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2018, 11:53 pm
சிவகார்த்திகேயன் வரிசையாக பல படங்களில் நடித்து தவிர்க்க முடியாத முன்னனி நடிகராக வலம் வருகின்றார். தற்போது நடிப்பை தாண்டி, பட தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
Samayam Tamil sivakarthikeya


சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘கனா’. இந்த படத்தை பாடகர் மற்றும் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ் முதன் முறையாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.


சிவகார்த்திகேயனின் மகள் சாதனை:
இப்படத்திற்காக சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடல் வைரலானது.

இந்த பாடல் யூடியூப்பில் 50 மில்லியன் ( கோடி) பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சிவகார்த்திகேயனைப் போல ஆராதனாவுக்கு பல ரசிகர்கள் உருவாக்கிருப்பதாக தான் பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்