ஆப்நகரம்

படப்பிடிப்பில் ரஜினி ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்: நடிகை ஹுமா குரேஷி!

‘காலா’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஜென்டில்மேனாக என்னிடம் நடந்து கொண்டார் என்று நடிகை ஹுமா குரேஷி கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Jun 2018, 4:43 pm
‘காலா’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஜென்டில்மேனாக என்னிடம் நடந்து கொண்டார் என்று நடிகை ஹுமா குரேஷி கூறியுள்ளார்.
Samayam Tamil kaala


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘காலா’. இந்தப் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பவர் நடிகை ஈஸ்வரி ராவ். மேலும் ரஜினியின் காதலியாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. படத்தில் இவர் ரஜினிக்கு மனைவியாக நடிக்கவில்லை என்றாலும் அவர் தான் ஹீரோயின். படம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது ஹுமா குரேஷி படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்த்து பயந்ததாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ரஜினி சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் அவர் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஜென்டில்மேனாக நடந்து கொண்டார். ஒரு சீனில் நான் அவரை பார்த்து கத்துவது போல இருந்தது. அப்படி செய்ய நான் முதலில் பயந்தேன். பின்னர் கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த சீனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் சந்தோஷம்“என ஹுமா குரேஷி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்