ஆப்நகரம்

அதிர்ச்சியாக இருக்கிறது, கலங்க வைக்கிறது: சிம்பு உருக்கம்

தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்தின் மரணம் தன்னை கலங்க வைத்திருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Oct 2020, 1:27 pm
சிம்பு, ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தை தயாரித்த கிருஷ்ணகாந்த் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்த சிம்பு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil simbu


அந்த அறிக்கையில் சிம்பு கூறியிருப்பதாவது,

நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். மன்மதன் படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது.

என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்கள். மன்மதன் படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க, இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சிம்பு, தனுஷ், விக்ரம் பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்

மன்மதன் தவிர்த்து விக்ரமின் கிங், தனுஷின் திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், துஷ்யந்தின் மச்சி, விவேக்கின் சொல்லி அடிப்பேன் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார் கிருஷ்ணகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்