ஆப்நகரம்

பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்? அவரே கூறிய விளக்கம்

கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலக்ஷ்மிக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என தகவல் பரவிய நிலையில், அதை அவர் மறுத்துள்ளார்.

Samayam Tamil 27 Jun 2020, 4:09 pm
இப்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருப்பினும் இது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. பாதிப்புக்கு உள்ளான 5 லட்சம் நபர்களில் இதுவரை குணமாகி உள்ளவர்கள் எண்ணிக்கை விரைவில் மூன்று லட்சத்தினை தொட உள்ளது.
Samayam Tamil Vijayalakshmi Darshan


உலக அளவில் தற்போது வரை 9.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட உள்ளனர். இது கூடிய விரைவில் ஒரு கோடியை தொடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது என தகவல் பரவியது. இது கன்னட சினிமா துறையில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது முற்றிலும் வதந்தி என விஜயலட்சுமி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் ட்விட்டில் கூறியிருப்பதாவது..

"எனக்கு கொரோனா பாசிட்டிவ் என ஒரு வதந்தியை நீங்கள் கேள்விப்பட்டு இருந்தால், நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன், நான் நலமாகத்தான் இருக்கிறேன். இது போன்ற கடினமான நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என விஜயலட்சுமி தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

தர்ஷன் மற்றும் விஜயலட்சுமிக்கு கடந்த 2003ல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளான். 2011இல் தர்ஷன் தன்னை கொடுமைப் படுத்துவதாக விஜயலட்சுமி பெங்களூர் போலீசில் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் கணவர் செருப்பால் அடித்தார், சிகரெட் கொண்டு சூடு வைத்தார் என பல அதிர்ச்சி புகார்களை கூறியிருந்தார். மேலும் துப்பாக்கி காட்டி மிரட்டினார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அதன் பின் தர்ஷனை கைது செய்த போலீஸ் அவரை 15 நாட்கள் சிறையில் வைத்திருந்தது. அதன் பிறகு வெளியில் வந்த அவர் மன்னிப்புக் கோரினார். அதன்பிறகு 2016-ல் மீண்டும் தர்ஷன் தன்னை கொடுமைப் படுத்துவதாக புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த வருடம் மீண்டும் தர்ஷன் விஜயலக்ஷ்மியை வீட்டில் கொடுமைப் படுத்துவதாக தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி தான் என அவர் விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் இந்த வருடத் துவக்கத்தில் விஜயலட்சுமி மற்றும் தர்ஷன் இருவரும் பாண்டிச்சேரி அருகிலுள்ள திருநல்லாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று இருந்தனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்