ஆப்நகரம்

பிகினிக்கு ஓகே சொன்ன லட்சுமி மேனனின் அதிரடி ஆரம்பம்.

பிகினி உடையில் நடிப்பதற்கு நான் ரெடியாக இருக்கிறேன் என்று லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

TNN 4 Oct 2016, 10:32 am
சசிகுமார் நடிப்பில் வந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன். அறிமுகப் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.
Samayam Tamil i am ok for bikini scene lakshmi menon
பிகினிக்கு ஓகே சொன்ன லட்சுமி மேனனின் அதிரடி ஆரம்பம்.


இப்படத்தைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 3 முதல் 4 படங்கள் வரை நடித்து வெளியிட்டார். அத்தனையும் குடும்ப பாங்கான கதையை மையமாக வைத்து உருவான படங்கள். தற்போது அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கிளாமராக நடிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பிகினி உடையிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். நான் நீச்சல் கற்றுக்கொண்ட போது ஸ்விம்சூட் அணிந்து தான் நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்படியிருக்கும் போது பிகினி உடையில் வலம் வர எனக்கும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த அதிரடி முடிவு லட்சுமி மேனனி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த இவரை பார்த்த ரசிகர்கள் இனி பிகினி உடையில் பார்க்கப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த மிருதன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு விஜய் சேதிபதியுடன் ஜோடி சேர்ந்து செக்ஸியாக நடித்த றெக்க படம் வரும் 7ம் தேதி வெளியாகயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்