ஆப்நகரம்

விஜய்க்கு நான் தான் வில்லன் என்கிறார் நடிகர் ராதாரவி!

விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நான்தான் அவருக்கு வில்லன் என்று படத்தின் கதையை கசியவிட்டுள்ளார் நடிகர் ராதாரவி.

Samayam Tamil 19 Mar 2018, 5:39 pm
விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நான்தான் அவருக்கு வில்லன் என்று படத்தின் கதையை கசியவிட்டுள்ளார் நடிகர் ராதாரவி.
Samayam Tamil vijay-radharavi


நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில்நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடாததால் தற்போது படத்தை ‘விஜய் 62’ என்றே அழைத்து வருகின்றனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் விஜய்யை எதிர்க்கும் வில்லனாக நடிகர் ராதாரவி நடித்து வருகிறார்.

நடிகர் ராதாரவி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘‘விஜய் படத்தில் நான் தான் வில்லன். ஒரு அமைச்சராக நடிக்கிறேன், பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும். என்னை மீறி அவர் வருவார் என்பது போல் ராதாரவி பேச, அதை வைத்து, மக்கள் நலனுக்காக விஜய் அரசியல்வாதிகளிடம் மோதுவது தான் படத்தின் கதை என சமூக வலைத்தளத்தில் இப்போதே பேச தொடங்கிவிட்டனர். இது மட்டுமின்றி படத்தில் விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்துவது போல் காட்சியும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்