ஆப்நகரம்

எனது டார்க்கெட் ஹீரோக்கள் இல்லை: கீர்த்தி சுரேஷ்!

எனது டார்க்கெட் ஹீரோக்கள் இல்லை, நல்ல கதையம்சம் உள்ள படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

TOI Sports 18 Aug 2017, 6:50 pm
எனது டார்க்கெட் ஹீரோக்கள் இல்லை, நல்ல கதையம்சம் உள்ள படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Samayam Tamil i dont chase heroes keerthy suresh
எனது டார்க்கெட் ஹீரோக்கள் இல்லை: கீர்த்தி சுரேஷ்!


நடிகை கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’ ஆகிய படங்களில் நடித்ததை அடுத்து விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து தற்போது சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் நானி, பவன் கல்யாணுடன் நடித்து வருபவர், ‘மகாநதி’ படத்திலும் லீடு ரோலில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் நடிப்பது வரை ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை செலக்ட் பண்ணி வந்த கீர்த்தி சுரேஷ், இப்போது ஹீரோக்களின் படம் என்பதை விட கதைக்கும், கதாபாத்திரத்திற்க்குமே முக்கியத்துவம் கொடுக்கிறாராம். அவரிடத்தில் அஜீத்துடன் நடிப்பதற்கான முயற்சி நடக்கிறதா? என்று கேட்டால், அஜீத் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும், தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த வாய்ப்பு தானாக வரும். அதனால் வருகிற படங்களில் நல்லதாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். இந்தந்த ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது டார்க்கெட் இல்லை என்கிறார், எனக்கு நல்ல கதைதான் முக்கியம் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

I don’t chase heroes: Keerthy suresh

அடுத்த செய்தி

டிரெண்டிங்