ஆப்நகரம்

புதுமுக நடிகைகள் தான் சிறந்தவர்கள்: விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, என்னுடைய படத்திற்கு புதுமுக நடிகைகள் தான் சிறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

TNN 7 Oct 2016, 2:57 pm
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, என்னுடைய படத்திற்கு புதுமுக நடிகைகள் தான் சிறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil i feel comfortable with newcomers as my heroines vijay antony
புதுமுக நடிகைகள் தான் சிறந்தவர்கள்: விஜய் ஆண்டனி


நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் மற்றும் பிச்சைக்காரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது சைத்தான் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படங்களில் இவருக்கு ஜோடியாக புதுமுக ஹீரோயின்களான மஞ்சரி, அக்ஷா பர்தாசனி, சுஷ்மா ராஜ் மற்றும் சாதனா டைட்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.

முன்னணி ஹீரோயினுக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தொடர்பாக விஜய் ஆண்டனி கூறுகையில், முதலில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நான் ஹீரோ கிடையாது. முன்னணி ஹீரோயின்கள் என் படத்தில் நடித்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக புதுமுக நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவர்கள் தான் படப்பிடிப்பிற்கு அதிக கால்ஷீட் கொடுப்பார்கள்.

படப்பிடிப்பு முடிப்பதற்கு இதுதான் ஒரு எளிய வழி. மேலும், என்னுடைய படங்களில் வரும் கதையில், ஹீரோயினுக்கு கிளாமரான இமேஜ் எதுவும் கிடையாது. நான் முன்னணி ஹீரோயின் தான் படத்திற்கு ஹீரோயின் என்று சொன்னால் தயாரிப்பாளர் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால், இப்போதைய படங்களுக்கு முன்னணி ஹீரோயின்கள் தேவையில்லை என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Music director-turned-hero Vijay Antony has said that he feels absolutely comfortable working with newcomers as his heroines.

அடுத்த செய்தி

டிரெண்டிங்