ஆப்நகரம்

சொந்தமாக இசைக்குழு நடத்தி வரும் மடோனா!

நடிகை மடோனா செபாஸ்டியன், சொந்தமாக இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார்.

Samayam Tamil 19 Jul 2018, 6:34 pm
நடிகை மடோனா செபாஸ்டியன், சொந்தமாக இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார்.
Samayam Tamil madonaas


நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கைப் பற்றி மடோனா கூறியதாவது: ‘‘நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நான் அவற்றையெல்லாம் நான் மறுத்துவிடுகிறேன். காரணம் என் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். லிப் டூ லிப் முத்தக் காட்சியில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அப்படியாக வந்த மூன்று படங்களை மூன்று மாதங்களில் இழந்திருக்கிறேன்.

முதன் முறையாக ஹீரோவை கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடித்தபோது அந்த சம்பவத்தை என் அம்மாவிடம் கூறி அழுதுவிட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். பிறரிடம் பேசவே பயப்படுவேன். அடிப்படையில் நான் ஒரு பாடகி. தற்போது நான் சொந்தமாக ஒரு இசைக்குழு நடத்தி வருகிறேன். அதன் மூலம் பல இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன்’’ என்றார் மடோனா செபாஸ்டியன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்