ஆப்நகரம்

விஜய்யை வெறுக்க காரணம், இது தான்: காமெடி நடிகர் கருணாகரன்

ரசிகர்களின் செயல்பாடுகள் தான் விஜய்யை வர வர வெறுக்க வைப்பதாக நடிகர் கருணாகரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Oct 2018, 4:19 pm
ரசிகர்களின் செயல்பாடுகள் தான் விஜய்யை வர வர வெறுக்க வைப்பதாக நகைச்சுவை நடிகர் கருணாகரன் கூறியுள்ளார்.
Samayam Tamil karunakaran


சமீபத்தில் நடந்த சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகளை விமர்சித்து குட்டி கதை ஒன்றை கூறினார். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘குட்டி கதைகள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா. ரசிகர்ளுகக்கு அட்வைஸ் பண்ணும் நடிகர்கள், அவருடைய ரசிகர்கள் முதலில் பின்பற்றுகிறார்களா என்பதை பார்க்க வேண்டும்’ என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடினார்.

இதையடுத்து கருணாகரனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்கள், மீம்ஸ்கள் போட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த கருணாகரன், கடுப்பேத்தறவன் கிட்ட கம்முனு இருக்கனும் என்று விஜய் பாணியிலேயே பதிவிட்டார். மேலும், இந்த பதிவை நடிகர் விஜய்க்கும் டேக் செய்துள்ளார். கருணாகரன் நடிகர் அஜித்துடன் நடித்துள்ளதால், அவர் அஜித் ரசிகராக இருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் கருதுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்