ஆப்நகரம்

பா.ரஞ்சித், 20 முறை பார்த்த விஜய் நடித்த படம்!

விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தை 20 தடவை பார்த்ததாக இயக்குனர் பா.ரஞ்சித், கூறியுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2018, 5:41 pm
விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தை 20 தடவை பார்த்ததாக இயக்குனர் பா.ரஞ்சித், கூறியுள்ளார்.
Samayam Tamil pa-ranjith


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர் வரிசையில் இருப்பவர் பா.ரஞ்சித். இவர் ரஜினியை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய ªவ்ற்றியைப் பெற்றது. தற்போது இவருக்கு பாலிவுட் படங்களை இயக்கஅழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பா.ரஞ்சித் ‘காலா’ ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு தொகுப்பாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த படம் எது என்று ரஞ்சிடம் கேட்க ‘‘விஜய் சார் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ படத்தை 20 தடவைக்கு மேல் பார்த்ததாக’’ கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்