ஆப்நகரம்

விஜய் சாரிடம் பிடித்தது அமைதிதான்: மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ்!!

''விஜய் சார் தோளில் கை போட்டு பேசுவார். தோளில் கை போடவிட்டு பேசுவார். அமைதி என்பது சிறப்பான ஆயுதம். அதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்'' என்று மெர்சல் ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் இன்று நடிகர் தனுஷ் பேசினார்.

Samayam Tamil 20 Aug 2017, 8:50 pm
''விஜய் சார் தோளில் கை போட்டு பேசுவார். தோளில் கை போடவிட்டு பேசுவார். அமைதி என்பது சிறப்பான ஆயுதம். அதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்'' என்று மெர்சல் ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் இன்று நடிகர் தனுஷ் பேசினார்.
Samayam Tamil i like vijay sirs calmness says dhanush in mersal audio launch
விஜய் சாரிடம் பிடித்தது அமைதிதான்: மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ்!!


இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசுகையில், ''நிறைய முக்கிய விஷயங்கள் இங்கே பேச வேண்டியது இருக்கு. சினிமாவில் ரஹ்மானின் 25வது வருடம், விஜய் சாரின் 25 வது வருடம். தேனாண்டாள் நிறுவனத்திற்கு 100 வது படம். ஆதலால், இந்த ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக செய்ய வேண்டியது நியாயமே.

விஜய் சாரின் தோழனாக வந்துள்ளேன். தோளில் கை போட்டு பேசுவார். தோளில் கை போடவிட்டு பேசுவார். அது ஒரு நல்ல மனசு இருக்கிற மனிதனால் மட்டுமே முடியும். 25 ஆண்டுகளாக, இரும்பாக அடி வாங்கி, பட்டறையில் செதுக்கப்பட்டு, இன்று ஷார்ப்பான கத்தியாக இன்று அமைதியாக அமர்ந்து இருக்கிறார்.

அவரிடம் இந்த அமைதிதான் எனக்கு பிடிக்கும். உலகில் அமைதிதான் சிறப்பான ஆயுதம் என்று கூறுவார்கள். அதை நான் அவரிடம் கற்றுக் கொண்டேன். ரஹ்மான் சார் உங்களைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நீங்கள் கடந்த 25 ஆண்டுகளாக எங்களுக்கு இனிமையான இசை அளித்து வருகிறீர்கள். அட்லியுடன் வேலை செய்ய காத்துக் கொண்டு இருக்கிறேன். இங்கே தளபதியின் ரசிகர்களை சந்தித்ததில் சந்தோசம்'' என்றார்.

i like vijay sir's calmness says dhanush in mersal audio launch

அடுத்த செய்தி

டிரெண்டிங்