ஆப்நகரம்

முரளிதரனாக நடிக்க கேட்டாங்க, நான் முடியாதுன்னுட்டேன்: அசுரன் நடிகர்

முத்தையா முரளிதரனாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாக டீஜே அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Oct 2020, 2:21 pm
800 படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கிறார் என்று கூறி மோஷன் போஸ்டரை வெளியிட்டதும், வெளியிட்டார்கள் ஒரே பிரச்சனையாக உள்ளது. தமிழினத் துரோகியான முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
Samayam Tamil teejay


800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர், சினிமா ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு தமிழன் தமிழினத் துரோகியின் முகமாகிவிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 800 படத்தில் இளம் வயது முத்தையா முரளிதரனாக நடிக்க அசுரன் படம் புகழ் டீஜே அருணாச்சலத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் முரளிதரனாக நடிக்க மறுத்துவிட்டார்.

800 படத்தில் நடிக்க மறுத்தது குறித்து டீஜே அருணாச்சலம் கூறியதாவது,

நான் இந்தியாவில் இருந்தபோது 800 படத்தை எடுப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள். நான் இயக்குநரை அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். அவர் என்னிடம் கதை சொன்னார். இளம் வயது முத்தையா முரளிதரனாக நடிக்க கேட்டார்கள்.

800 படத்தில் இலங்கை அரசு மற்றும் தமிழர்களுக்கு இடையேயான போர் காட்சி உள்ளது. அது எனக்கு சரி என்று தோன்றவில்லை. என் அம்மா ஈழத் தமிழச்சி. அந்த போரின்போது பல கொடூரங்கள் நடந்தது. இந்த படம் தொடர்பான பாலிட்டிக்ஸில் தலையிட நான் விரும்பவில்லை. அதனால் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

நான் விஜய் சேதுபதி சார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அசுரன் படத்தில் வேல்முருகன் போன்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்ததற்காக அவர் என்னை பாராட்டினார். சரியான ஸ்க்ரிப்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அதை தான் செய்கிறேன் என்றார்.

போர் காட்சிகள் இருக்கிறது என்கிறார் டீஜே. ஆனால் தயாரிப்பு தரப்பு படத்தில் எந்தவித அரசியலும் இல்லை என்கிறது.

தயாரிப்பு தரப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் இத்திரைப்படத்தின் கதையம்சம் என்றது.

முரளிதரனாக நடிப்பது விஜய் சேதுபதி இஷ்டம், அரசியல் பார்க்கக் கூடாது: குஷ்பு

அடுத்த செய்தி

டிரெண்டிங்