ஆப்நகரம்

அஜீத் வீட்டில் விஜய்யைப் பார்த்தேன்: சிவா!

விஜய்யை, அஜீத் வீட்டில்தான் முதன் முறையாக பார்த்துப் பேசினேன் என்று நடிகர் சிவா கூறியுள்ளார்.

Samayam Tamil 14 Jul 2018, 4:49 pm
விஜய்யை, அஜீத் வீட்டில்தான் முதன் முறையாக பார்த்துப் பேசினேன் என்று நடிகர் சிவா கூறியுள்ளார்.
Samayam Tamil ajith vijay


நடிகர்கள் அஜீத், விஜய் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள். இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் பாக்ஸ் ஆபீசில் ஒரு யுத்தமே நடந்து கொண்டிருக்கும்.

இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள். ரசிகர்களுக்குள் யாருடைய தலைவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ஆரம்பித்த சண்டை இந்தியளவில் ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு இருக்கும்.

ஆனால், அஜீத்தும், விஜய்யும் விடுமுறை நாட்களில் தங்களின் குடும்பத்தோடு டூர் கூட செல்வார்களாம், இதை கங்கை அமரன் கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து ’தமிழ்ப்படம்2’ வில் ஹீரோவாக கலக்கிய சிவா, ஒரு பேட்டியில் ‘‘நான் விஜய் சாரை முதன் முதலாக அஜீத் சார் வீட்டில் தான் பார்த்துப் பேசினேன். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இப்போது வரைக்கும் இருந்து வருகிறார்கள்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்