ஆப்நகரம்

கமல், ரஜினிக்கு நோ!! டிடிவி னா ஓகே – அட்டகத்தி தினேஷ்

நடிகர் அட்டகத்தி தினேஷ், அரசியலில் ரஜினி கமலுக்கு ஆதரவு இல்லை என்றும், டிடிவி தினகரனையே ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Aug 2018, 12:43 pm
நடிகர் அட்டகத்தி தினேஷ், அரசியலில் ரஜினி கமலுக்கு ஆதரவு இல்லை என்றும், டிடிவி தினகரனையே ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கமல், ரஜினிக்கு நோ!! டிடிவி னா ஓகே – அட்டகத்தி தினேஷ்
கமல், ரஜினிக்கு நோ!! டிடிவி னா ஓகே – அட்டகத்தி தினேஷ்


நடிகர் தினேஷ், அடுத்ததாக ‘அண்ணனுக்கு ஜே’ என்ற படத்தில் நடித்துள்ளார். வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில், தினேஷ்க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசியலில் ஆர்வம் உள்ளதா? ரஜினி அல்லது கமல் இவர்களில் யாரை ஆதரிப்பீர்கள்? அரசியலுக்கு வர ஆர்வம் உள்ளதா என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த நடிகர் தினேஷ், “சிறு வயது முதலே அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்துள்ளது. அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தாலும், அதற்கு இன்னும் அனுபவம் தேவை. நியாயமானக் கோரிக்கைகளுக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள், அந்த ஆதங்கமே அரசியலில் இறங்கக் காரணம். தற்போது வழிகாட்ட சரியான தலைவர்கள் இங்கு இல்லை, இருப்பவர்களும் கேள்வி கேட்க மறுக்கின்றனர்.

கமல்-ரஜினிக்கு எனது ஆதரவு கிடையாது. டிடிவி தினகரனுக்கே எனது ஆதரவு. அவர் பேசுவது எனக்கு பிடிக்கும். எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாக அணுகுவது எனக்குப் பிடித்திருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்