ஆப்நகரம்

​ சூர்யாவுக்கு ஐ லவ் யூ சொல்ல விரும்பும் சாய் பல்லவி

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் மலையாள டீச்சர் சாய் பல்லவி. தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிபார்க்கப்படுகிறது.

TNN 10 Sep 2016, 6:16 pm
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் மலையாள டீச்சர் சாய் பல்லவி. தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிபார்க்கப்படுகிறது.
Samayam Tamil i want to tell i love you to actor surya
​ சூர்யாவுக்கு ஐ லவ் யூ சொல்ல விரும்பும் சாய் பல்லவி


இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை. அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ இல்லையோ. எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவரை நேரில் சந்தித்து மூன்றே மூன்று வார்த்தை சொல்ல விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், தனக்கு மிகவும் பிடித்த படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படம் தான். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் படம் காற்று வெளியிடை. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் -3 ல் பிஸியாக இருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இவருடைய 35வது படத்தில் இவருக்கு அப்பாவாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணனும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்