ஆப்நகரம்

பிக் பாஸில் இருந்து வெளியேறியும் 'அந்த' சம்பவத்தால் பயத்தில் டிவி நடிகை

பிக் பாஸ் 15 வீட்டில் தான் குளித்துக் கொண்டிருந்தபோது ப்ரதிக் செஹஜ்பல் பாத்ரூம் தாழ்ப்பாளை உடைத்தபோது பயந்துவிட்டதாக விதி பாண்டியா கூறியிருக்கிறார்.

Samayam Tamil 21 Oct 2021, 9:38 am
பிக் பாஸ் 15 நிகழ்ச்சியில் இருந்து தன்னை வெளியேற்றியது நியாயம் இல்லை என்று விதி பாண்டியா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i was terrified bigg boss 15 former contestant vidhi pandya about bathroom incident
பிக் பாஸில் இருந்து வெளியேறியும் 'அந்த' சம்பவத்தால் பயத்தில் டிவி நடிகை



விதி பாண்டியா

சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது சீசனில் ஒரே நேரத்தில் டோனல் பிஷ்ட் மற்றும் விதி பாண்டியா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தன்னை வெளியேற்றியது சரியல்ல என்று விதி பாண்டியா தெரிவித்துள்ளார். என்னை விட மோசமாக விளையாடியவர்கள் எல்லாம் அங்கு இருக்கிறார்கள். அவர்களை தான் முதலில் வெளியேற்றியிருக்க வேண்டும் என்கிறார் விதி.

நன்றி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு எனக்கு நிறைய பேரின் அன்பு கிடைத்திருக்கிறது. அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை பார்த்தவர்களுக்கு என் குணம் பிடித்திருக்கிறது. நிகழ்ச்சியை விட்டு வந்ததில் கவலையும் இருக்கத் தான் செய்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்று விதி மேலும் தெரிவித்துள்ளார்.

கேமரா

பிக் பாஸ் வீட்டில் உண்மையாக இருக்க முடியாது. ஏனென்றால் கேமராவுக்காக நீங்கள் நிறைய செய்ய வேண்டியது இருக்கும். பார்வையாளர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும். நான் கொஞ்சம் சோம்பேறி என்பதால் என்னால் முடியவில்லை. 80 சதவீத நேரம் போட்டியாளர்கள் கேமராக்களுக்காக தான் சிலவற்றை செய்கிறார்கள் என்கிறார் விதி. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

ப்ரதிக் செஹஜ்பல்

நான் குளித்துக் கொண்டிருந்தபோது பாத்ரூம் தாழ்ப்பாளை ப்ரதிக் உடைத்தது தான் பிக் பாஸ் வீட்டில் எனக்கு நடந்த மோசமான விஷயம். அவர் நல்லவர் என்று தெரியும். வேண்டும் என்றே தாழ்ப்பாளை உடைக்கவில்லை. ஆனாலும் அவர் செய்தது தவறு. அவரின் செயலால் பயந்துவிட்டேன். என் வாழ்வில் இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை என்று விதி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்