ஆப்நகரம்

விஜய் ஆட்டத்துடன் என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை: காஜல் அகர்வால்!

விஜய் ஆட்டத்துடன் என்னால் ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

TNN 19 Sep 2017, 8:17 pm
விஜய் ஆட்டத்துடன் என்னால் ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
Samayam Tamil i was unable to cope with vijays dance in mersal movie says kajal aggarwal
விஜய் ஆட்டத்துடன் என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை: காஜல் அகர்வால்!


நடிகை காஜல் அகர்வால், விஜய்யுடன் தொடர்ந்து ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ஆகிய படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக தற்போது ‘மெர்சல்’ படத்தில் நடித்துள்ளார். முந்தைய படங்களைப் போல ‘மெர்சல்’ படத்திலும் விஜய்க்கும், காஜல் அகர்வாலுக்கு சில ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம். அதோடு, அவர்கள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் ரசிகர்கள் விரும்பும் வகையில் இளமை துள்ளலுடன் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

Aren't @actorvijay and @MsKajalAggarwal the cutest pair? #Mersal #MaachoSongSnaps pic.twitter.com/iWq7VFutHG — Bangalore Times (@BangaloreTimes1) September 5, 2017 ‘மெர்சல்’ படம் குறித்து காஜல் அகர்வால் ஒரு பேட்டியில், ‘‘விஜய்யுடன் டான்ஸ் ஆடியது நல்ல அனுபவத்தை தந்துள்ளது. அதே சமயம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சில நடன அசைவுகளை அவர் ரொம்ப வேகமாக செய்து விடுவார். என்னால் முடியாது. அவரது ஆட்டத்துடன் என்னால் ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை. அதனால் பல ரீ-டேக்குகள் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது’ என்றார் காஜல் அகர்வால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்