ஆப்நகரம்

‘சந்தன தேவன்’ வெளியான பின்புதான் அடுத்த படத்திற்கு கால்ஷீட்: அதிதி மேனன்!

‘சந்தன தேவன்‘ படம் வெளியான பின்னர்தான் என்னுடைய அடுத்த படம் என்று நடிகை அதிதி மேனன் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

TOI Contributor 22 Apr 2017, 6:13 pm
‘சந்தன தேவன்‘ படம் வெளியான பின்னர்தான் என்னுடைய அடுத்த படம் என்று நடிகை அதிதி மேனன் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
Samayam Tamil i will give call sheet after finishing santhana devanaditi menon
‘சந்தன தேவன்’ வெளியான பின்புதான் அடுத்த படத்திற்கு கால்ஷீட்: அதிதி மேனன்!


அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சந்தனத் தேவன்’. இந்தப் படம் மதுரை மண்வாசனை கதையில் உருவாகி வருகிறது. ஜல்லிக்கட்டு கதையில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அமீர், சத்யா, அதிதிமேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நடிக்கும் அதிதி மேனன் தனது வேடம் குறித்து கூறுகையில், ‘‘சந்தனத் தேவன் படத்தில் நான் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். நிஜவாழ்க்கையில் பாவாடை தாவணியே அணியாத நான், இந்த படத்திற்காக படம் முழுக்க அந்த கெட்டப்பில் நடிக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்புக்கு நான் சென்றபோது அங்கு வந்த சில மதுரைக்கார பெண்களுடன் என்னை பழக வைத்தார் அமீர். அவர்களிடம் பழகியபோது ஒவ்வொரு விசயத்தையும் உள்வாங்கி அதை எனது நடிப்பில் பிரதிபலித்தேன். அதோடு, ரொமான்ஸ் மட்டுமே பண்ணக்கூடிய நாயகியாக இல்லாமல், மாறுபட்ட பர்பாமென்ஸை வெளிப்படுத்தும் வேடத்தில் நடிக்கிறேன். ஆனால் சந்தனத்தேவனில் நடித்து முடித்த பிறகுதான் மற்ற படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறேன். அதனால் வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். ‘சந்தனதேவன்’ படத்திற்குப்பிறகு வெயிட்டான வேடம் என்னைத் தேடி வரும்’’ என்கிறார் .

அடுத்த செய்தி

டிரெண்டிங்